Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு மிதுன ராசிபலன்கள்!

மிதுனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மிதுனம்

2022 புத்தாண்டு ராசிபலன் மிதுனம்

குடும்பத்தைச் சுமக்கும் சுமை தாங்கிகள் நீங்கள். உங்களின் 6-வது ராசியில் 2022 புத்தாண்டு பிறப்பதால் தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். மனைவியுடன் மனஸ்தாபம் நீங்கும். வீடு கட்டும் வேலையை முடிப்பீர்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு 
மிதுன ராசிபலன்கள்!

புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் 2022 புத்தாண்டு பிறப்பதால் செல்வாக்கு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.ஆபரணங்கள் வாங்குவீர்கள். புத்தாண்டு பிறக்கும்போது, செவ்வாய் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களின் ஆதரவால் சில வேலைகளை முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். தாய்மாமன் வழியில் மனஸ்தாபங்கள் விலகும்.

13.4.2022 வரை குரு 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். பாக்கிப் பணத்தைக் கொடுத்து புதிய சொத் துக்குப் பத்திரப்பதிவு செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். பேச்சு வார்த்தையில்லாமல் இருந்த அப்பா, இனி உங்களுடன் சேர்ந்துகொள்வார். வங்கிக் கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.

14.4.2022 முதல் குரு பகவான் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் முன்யோசனை தேவை. விமர்சனம், ஆடம்பரச் செலவுகள் வேண்டாம். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள். முக்கியப் பணிகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். அவசரப்பட்டு வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்கவேண்டாம்.

வருடம் முடியும் வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் விபத்துகள், ஏமாற்றங்கள், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னை, பண இழப்பு, வழக்குகள் வந்து நீங்கும்.

வருடம் பிறக்கும்போது ராகு 12-ல் மறைந்து இருப்பதால் மறைமுக லாபம் உண்டு. எனினும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பயணங் களும், அலைச்சலும் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கவேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள்.

கேது 6-ல் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வசதிகள் நிறைந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். எதிர்பார்த்திருந்த விசா கிடைத்து, அயல்நாடு சென்று வருவீர்கள். அந்நிய மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். 21.3.2022 முதல் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் ராகுவும், 5-ல் கேதுவும் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மகளின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் லாபம் உயரும். பாக்கிகள் வசூலாகும். சலுகைகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினா லும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கமிஷன், உணவு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழி வர வாய்ப்பு உண்டு. அதேநேரம், உங்களுக்கு எதிராக செயல்பட்ட உயரதிகாரி இடம் மாறுவார். நல்ல மேலதிகாரி பணியில் சேர்வார். புது சலுகைகளும் அதிக சம்பளத்துடன் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். ஜூன், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் சம்பள உயர்வு உண்டு.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைத் திடப்படுத்தி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவைப்பதாகவும், பணப்புழக்கத்தை அதிகப் படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதி கூடிவரும் நாளில் சுவாமிமலை முருகனை தரிசித்து வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்; தொட்டது துலங்கும்.