Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு சிம்மராசி பலன்கள்

சிம்மம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்மம்

2022 புத்தாண்டு ராசிபலன் சிம்மம்

தவறுகளைத் தட்டிக் கேட்க தயங்காதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் காலத்தில் 2022 புத்தாண்டு பிறப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

சிம்மம்
சிம்மம்

ழைய சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். `வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே' என தவித்த தம்பதிக்கு, அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் 2022 புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். வீடு கட்டும் பணி யைத் தொடங்குவீர்கள். தாய்வழிச் சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.

சுக்கிரன் 6-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 14.4.2022 முதல் குரு 8-ம் வீட்டில் மறைவதால், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், திடீர் செலவுகள், எதிர்பாராத பயணங்கள் வந்து போகும். அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வீட்டுக் கடன் தவணை களைக் குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத நிலைக்குச் சிலர் ஆளாகலாம்.

வருடம் பிறக்கும்போது 4-ம் வீட்டில் கேது நிற்பதால், முக்கிய ஆவணங்களில் கையெழுத் திடும்போது கவனமும் உரிய ஆலோசனையும் தேவை. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால், தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

10-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. வேலைச்சுமை அதிகரிக்கும். 21.3.2022 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் நுழைவதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் வீண் சந்தேகங்கள் நீங்கும். அதேநேரம் தந்தை யின் உடல் நிலை பாதிக்கப்படலாம்.

இந்த வருடம் முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வாங்கிய கடனில் அசலிலும் ஒரு பகுதியை அடைக்கும் அளவுக்கு வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்பனை செய்வீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே மாதத்தில் வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய தொடர்புகள் கிடைக்கும். ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில் எதிர்பாராத திடீர் திருப்பங்களும், அதிரடி லாபங்களும் உண்டாகும். உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலெக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களே! உங்கள் நிலை உயரும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காக நீங்கள் தொடுத்த வழக்கில் ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தீர்ப்பு வரும். சிலருக்கு வேறு நல்ல வேலை தேடி வரும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பலவிதத்திலும் முன்னேற்றம் தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ நாளில், திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்கீழ்வேளூர் எனப்படும் கீவலூர் தலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு அட்சயலிங்கேஸ்வரரை தரிசித்து வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உதவுங்கள்; தடைகள் நீங்கும்.