Published:Updated:

ஆங்கிலப்புத்தாண்டு கடக ராசி பலன்கள்!

கடகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடகம்

2022 ஆங்கிலப்புத்தாண்டு ராசிபலன் கடகம்

நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள். 2022 புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால், அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். கடன் அடைபடும்.பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

ஆங்கிலப்புத்தாண்டு 
கடக ராசி பலன்கள்!

சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். ரசனைக்கேற்ப வீடு அமையும். எதிர்பார்த்த பணம் வரும். புதன் 7-ல் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் சேரும்.

13.4.2022 வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் குரு மறைந்திருப்பதால், பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் துரத்தும். சொந்த-பந்தங்களுக்காக அலைச்சல் உண்டு. வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். ஆனால் 14.4.2022 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை வரம் கிட்டும். அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசு வேலைகள் விரைந்து முடியும். வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

கேது ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளை களின் போக்கிலேயே அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

21.3.2022 முதல் உங்கள் ராசிக்கு 4-ல் கேதுவும், 10-ல் ராகுவும் நுழைவதால், தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் கருத்துமோதல் வரக்கூடும். வீண் அலைச்சல், டென்ஷன், காரிய தாமதம், வாகன விபத்துகள் வந்துபோகும்.

இந்த ஆண்டு முழுக்க 7-ம் வீட்டில் சனி நிற்பதால், எதையும் திட்டமிட்டுச் செயல்படுத்துங் கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்களை மூக்கை நுழைக்க விடாதீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். காரியங்கள் இழுபறியாகி முடியும். வெளிவட்டாரங்களில் கவனமுடன் பழகுங்கள்.

வியாபாரிகளே! உணவு, கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர் கள். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் வரும். வருட முற்பகுதியில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகள் மனம் விட்டுப் பேசு வார்கள். அவர்களின் சொந்தப் பிரச்னைகளையும் தீர்த்துவைப்பீர்கள். சிலருக்குச் சம்பளம் உயரும். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். மூத்த அதிகாரி அடிக்கடி விடுப்பில் செல்வதால், அந்தப் பதவிக்குரிய பணிகளையும் திறம்பட முடிப்பீர்கள். அதேநேரம் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், விசாரணை ஆகியவையும் ஏற்படும். அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சிலர், விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, தனியார் நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்வீர்கள். மொத்தத்தில் இந்த 2022 புத்தாண்டு, ஜூலை முதல் - குருவருளால் உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அருளும் யோக பைரவரை வணங்கி வாருங்கள்; தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்; வெற்றி கைகூடும்.