Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு ரிஷப ராசிபலன்!

ரிஷபம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷபம்

2022 புத்தாண்டு ராசிபலன் ரிஷபம்

களங்கமற்ற பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தோற்றப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் வரும்.

ஆங்கிலப் புத்தாண்டு 
ரிஷப ராசிபலன்!

னைவிவழி உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். ராசிநாதன் சுக்கிரன் 9-ல் வலுவாக நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், விரக்தி விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைப்பட்ட கல்யாணம் முடியும். வீடு கட்ட உதவிகள் கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க பிள்ளை களுக்கு அருமையாக இருக்கும்.

புத்தாண்டு பிறப்பின்போது புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உயரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

13.4.2022 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ல் தொடர்வதால், அதுவரையிலும் வேலைப்பளு உண்டு. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக் கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பிரபலங்களைப் பகைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை நெருங்கி யவர்களிடம்கூட பகிரவேண்டாம்.

விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாக கையாளுங்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். வங்கிக் காசோலையைக் கவனமாகக் கையாளவும்.

14.4.2022 முதல் குரு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டு. உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். குழந்தை இல்லாத தம்பதிக்குப் பிள்ளை வரம் வாய்க்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். வங்கிக் கடனில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள்.

வருடம் பிறக்கும்போது ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம் வந்து நீங்கும். முன்கோபம் வேண்டாம். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். இருவருக்குள் பிரச்னையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். 21.3.2022 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் நுழைவதால் மனத் தைரியம் கூடும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். இளைய சகோதர வகையில் பிணக்குகள் நீங்கும். நாடாளுவோரின் நட்பு கிடைக்கும்.

சனி 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந் திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்ப தால் தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு உண்டு என்றாலும் செலவுகளும் இருக்கும். வழக்கு சாதகமாகும்.

வியாபாரிகளுக்கு வருட முற்பகுதி அமோகமாக இருக்கும். புது முதலீடு செய்வீர்கள். அதேநேரம் பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வந்து நீங்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது, சட்ட ஆலோசகரைக் கலந்து ஆலோசிக் கவும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங் களில் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களே! இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே உங்கள் கை ஓங்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சம்பளம் - பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்குப் புது வேலை அமையும். உயரதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் கொஞ்சம் சவாலாக இருக்கும்.

மொத்தத்தில் 2022 புத்தாண்டு புது அனுபவங் களோடு முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்!

பரிகாரம்: பஞ்சமி திதி நாளில் சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு வாருங்கள்; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்; எதிர்காலம் சிறக்கும்.