Published:Updated:

தனுசு ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்க்கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்க்கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

Published:Updated:
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் தனித்துவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... கடந்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு துன்பங்களைத் தாண்டி வாழ்வில் வளம் வருமா என்று காத்திருக்கும் உங்களுக்கு வரும் 2023-ம் ஆண்டு எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

ராசிக்கு 5-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வாழ்வில் வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடனை அடைக்க வழிகள் பிறக்கும். அந்தஸ்து உயரும். வேண்டிய சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்க்கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அநாவசிய செலவுகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவீர்கள்.

குருபகவான்
குருபகவான்

2023 ம் ஆண்டு குருபகவான் சஞ்சாரம் சாதகமா?

இந்த ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதி வரை குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து பல தருகிறார். எனவே திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசுவார்கள். நண்பர்களின் அலட்சிய மனோபாவம் வருத்தம் தரும். இறைவழிபாட்டில் மனம் செல்லும். சித்தர்களின் ஆசி கிடைக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். பயணத்தின் போது கவனம் தேவை. வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

குரு பகவான் 23.4.2023 முதல் 5-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தினரால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் மனம்மாறி வலிய பேசுவார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு மெய்ப்படும். சொத்துப்பிரச்னைகளுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தி இருந்து அழைப்பு வரும்.

ராகு கேது
ராகு கேது

ராகு - கேது தரும் பலன்கள்

8.10.2023வரை லாப வீட்டில் கேது இருப்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராகு 5-ம் வீட்டில் பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பூர்வீக சொத்து வழக்குகள் இழுபறியாகும். 9.10.2023 முதல் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும்.

சனிபகவான் சஞ்சாரம் எப்படி?

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதச் சனி தொடர்வதால் தேவையற்ற மனச் சலனங்கள் வந்துபோகும். டென்ஷன், அலைச்சல் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகமாகவே இருக்கும். எந்த விஷயத்திலும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள்.

29.03.2023 முதல் 23.08.2023 வரை சனிபகவான் அதிசாரமாக 3 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து ஒரு விடிவு உண்டாகும். புகழ், கௌரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்டுச் சில காரியங்களை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். இதுவரை இருந்துவந்த ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கு உற்சாகமாவீர்கள்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

வியாபாரம்: அமோகமாக இருக்கும். பணியாளர்கள் சிறப்பாகப் பணிசெய்வார்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி, ஹாட்வேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகம்: உங்கள் ஆலோசனை அலுவலகத்தில் பாராட்டப்படும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உங்களை வியந்து பார்ப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு பிரச்சனைகளிலிருந்து விடுவித்து மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் தருவதாக அமையும்.