Published:Updated:

கடக ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கடகம்

சூரியன், உங்கள் ராசிக்கு 6-ம் வீடான தனுசில் வலுவாக நிற்பதால் அரசுக் காரியங்கள் சாதகமாகும். வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும்.

கடக ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

சூரியன், உங்கள் ராசிக்கு 6-ம் வீடான தனுசில் வலுவாக நிற்பதால் அரசுக் காரியங்கள் சாதகமாகும். வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும்.

Published:Updated:
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கடகம்
சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு நினைத்ததை நினைத்தபடி முடிக்கத் துடிக்கும் கடக ராசி அன்பர்களே... உங்களுக்கு வரும் 2023-ம் ஆண்டு எவ்வாறு அமையும் என்பதை இப்போது காண்போம்.

உங்கள் ராசிக்கு 10-வது வீடான மேஷ ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. பத்தாமிடம் உழைப்புக்குரியது. எனவே இந்த ஆண்டு உங்கள் உழைப்பு மேம்படும். கடினமாக உழைத்து சாதிப்பீர்கள். பணிரீதியிலான சவால்கள் மனப்போராட்டங்கள் ஓயும். உங்கள் பேச்சுத் திறமை வெளிப்படும். தடைபட்ட வேலைகளை முயன்று முடிப்பீர்கள். நீண்ட நாள்களாகத் தடைப்பட்டிருந்த பணவரவு உண்டாகும். கடன்களை அடைக்க வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள்.

குருபகவான்
குருபகவான்

குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.

சூரியன், உங்கள் ராசிக்கு 6-ம் வீடான தனுசில் வலுவாக நிற்பதால் அரசுக் காரியங்கள் சாதகமாகும். வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். உறவுகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். சில விமர்சனங்கள் உங்கள் மீது எழும்.

குரு பகவான் சஞ்சாரம் எப்படி?

22.4.2023வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான மீனத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சின்னச் சின்னக் கடன்களை அடைப்பீர்கள். புதிய வீடு அல்லது மனை வாங்கும் யோகம் வாய்க்கும். தந்தையின் உடல் நிலை சீராகும். சுபகாரியங்களில் கலந்து கொள்ளும் யோகம் வாய்க்கும்.

23.04.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீடான மேஷத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். அரசு தொடர்பான பணவிஷயங்களில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் அந்தரங்க ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

சனிபகவான்
சனிபகவான்

2023-ம் ஆண்டில் சனிபகவான் சாதகமா?

சனிபகவான் ஏழாம் வீட்டில் கண்டக சனியாகத் தொடர்கிறார். இதனால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வந்துபோகும். உடல் நலத்திலும் அக்கறை காட்டுவது நல்லது. 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 8 - ம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து அஷ்டம சனியாகப் பலன் கொடுக்க இருக்கிறார். இதனால் மனதில் தேவையற்ற கவலைகள் குடிகொள்ளும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குலதெய்வ வழிபாடுகளை முறையாக மேற்கொள்வதன் மூலம் இந்தக் காலகட்டத்தில் நன்மைகள் பெருகும்.

ராகு - கேது சஞ்சாரம் எப்படி?

8.10.2023 வரை கேது உங்கள் ராசிக்கு நாலாம் வீடான துலாமில் சஞ்சாரம் செய்கிறார். ராகு பகவான் 10-ம் வீடான மேஷத்தில் இருக்கிறார். இதனால் தேவையற்ற டென்ஷன் அலைச்சல் இருந்த வண்ணம் இருக்கும். குடும்பத்தினரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டி வரும். அதேவேளை 9.10.2023 முதல் கேது 3-ம் வீடான கன்னியிலும் ராகு 9 ம் வீடான மீனத்திலும் அமர்ந்து பலந்தர இருக்கிறார்கள். இதனால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவால்களை மிகத் துணிவுடன் சந்திப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் செலவுகள் அதிகரிக்கும். வேற்றுமொழி, மதம் சார்ந்தவர்களால் நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது
ராகு கேது

வியாபாரம்: வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படுவார்கள். புதிய பணியாளர்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவு படுத்த வாய்ப்பு தேடிவரும். புதிதாக முதலீடுகளை நன்கு ஆலோசித்துச் செய்யலாம். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் உண்டாகும். சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

உத்தியோகம்: சுமுகமான நிலை உண்டாகும். அதிகாரிகள் இதுவரை உங்களிடம் காட்டிய கடுகடுப்பைக் குறைத்துக் கொள்வார்கள். சம்பளம் உயர்வு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். கிடைக்கும் பணியில் உங்களை நிரூபித்துக் காட்டுவதன் மூலம் பல சலுகைகள் கிடைக்கும். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள் இருந்த வண்ணம் இருக்கும். அலுவலகத்தில் தேவையற்ற விசாரணைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும். மனம் தளராமல் துணிவோடு சந்தியுங்கள். அனைத்தும் நன்மையாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு கடின உழைப்பால் சவால்களில் வெற்றி பெற வைப்பதுடன், சாதிக்க வைப்பதாகவும் அமையும்.