புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு துலாம் ராசி பலன்கள்

துலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
துலாம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு துலம் ராசிபலன்கள்!

இரக்கக் குணம் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் 2023 புத்தாண்டு பிறக்கிறது. உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமை கூடும். தடைகள் நீங்கித் திருமணம் கூடிவரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

2023 புத்தாண்டு 
துலாம் ராசி பலன்கள்

சுக்கிரனும் புதனும் வலுவாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கி் கடன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

குரு பகவான் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், சிலநேரங்களில் வீண் டென்ஷன், வேலைச்சுமை, வீண் பழி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். காரியங்களை முடிப்பதில் அலைச்சல் இருக்கும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம்.

குரு 23.4.23 முதல் 7-ம் வீட்டில் அமர்வதால், திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரைகுறையான வேலைகள் முழுமை பெறும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடைபெறும். தம்பதிக்கு இடையே சந்தேகம், ஈகோ பிரச்னைகள் விலகும். குழந்தை இல்லாத தம்பதிக்குப் பிள்ளை வரம் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். மகனுக்கு நல்ல இடத்தில் பெண் அமையும். சேமிக் கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். சகோதரர் ஓடி வந்து உதவுவார்.

8.10.23 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும் 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச் சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்துசெல்லும். வாழ்க்கைத் துணை வருக்கும் சிறு சிறு உடல் பாதிப்புகள் வந்து நீங்கும். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை, கேது 12-ம் வீட்டிலும் ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சீராகும். இல்லத்தில் திருமணத் தடைகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். மனக் கசப்புகளால் விலகியிருந்த வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர்.

2023 புத்தாண்டு 
துலாம் ராசி பலன்கள்

புத்தாண்டின் தொடக்கத்தில் சனி பகவான் சுக ஸ்தானமான 4-ம் வீட்டிலேயே தொடர்வதால், இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். தாயாருக்குச் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தை விற்றுவிட்டுப் புது சொத்து வாங்குவீர்கள்.

29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 5-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்து போகும். கர்ப்பிணிகள் மாடிப்படியில் ஏறும்போதும், சாலைகளைக் கடக்கும் போதும், சமையல் செய்யும்போதும் கவனம் தேவை.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவர்களைப் பங்கு தாரர்களாக சேர்த்துக்கொள்ளலாம்.

உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைகழிப்பு கள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறை களைச் சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். விரும்பத்தகாத இட மாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் முற்பகுதியில் அலைச்சலும் சலிப்பும் இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதி உங்களைச் சாதிக்கவைக்கும்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும். சனிக்கிழமைகளிலும் சுவாதி நட்சத்திர நாளிலும் பானகம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; காரிய அனுகூலம் உண்டாகும்.