புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு கடக ராசிபலன்கள்

புத்தாண்டு கடக ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டு கடக ராசிபலன்கள்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு கடகராசி பலன்கள்

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் ஓயும். தடைப்பட்ட வேலைகளை சமயோஜிதமான பேச்சால் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும்.

2023 புத்தாண்டு கடக ராசிபலன்கள்

ராசியைச் சுக்கிரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் அமைதிக்குக் குறை இருக்காது. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

சூரியன் 6-ல் வலு அடைந்திருப்பதால் நிலுவை யில் இருந்த அரசுக் காரியங்கள் உடனே முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் உறவினர்கள், நண்பர்களுக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள்; செலவு செய்வீர்கள். ஆனாலும் வீண் விமர்சனங்களே மிஞ்சும்.

ஆண்டின் ஆரம்பம் முதல் 22.4.23 வரை ராசிக்கு 9-ம் வீட்டில் குரு நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புதுச் சொத்துக்கு மீதிப் பணத்தைக் கொடுத்துப் பத்திரப்பதிவு செய்வீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிக் கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

23.4.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குருபகவான் தொடர்வதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படுங்கள். வீண் வாக்குவாதம், ஆடம்பரம் ஆகியவற்றைத் தவிர்க்கவும். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அரசு வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங் களை யாரிடமும் பகிர வேண்டாம்.

2023 புத்தாண்டு கடக ராசிபலன்கள்

புத்தாண்டின் தொடக்கத்தில் 7-ல் சனிபகவான் அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள்; கவனம் தேவை. சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 8-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும். 8.10.23 வரையிலும் உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

9.10.23 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால், புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வழக்குகள் சாதகமாகும். இளைய சகோதர வகையில் ஆதாயம் அடைவீர்கள். ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் சிறிது பாதிக்கும். பிதுர் வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மையை விட்டுவிடுங்கள். வெளி நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

வியாபாரிகளே! சந்தை நிலவரம் குறித்து முழுமையான புரிதல் உண்டாகும். உணவு, கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கடையை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். புதிதாக முதலீடு செய்யலாம். ஜனவரி, மே, ஜீன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். புகழ் பெற்ற நிறுவனங் களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். பெரிய பதவியில் அமர்த்தப் படுவீர்கள். கூடுதல் பொறுப்பு - பணிகளைச் சாமர்த்தியமாகக் கையாண்டு பாராட்டு பெறுவீர்கள். அதேநேரம் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், அலுவலகத்தில் சின்ன சின்ன விசாரணைகளையும் சந்திக்க வேண்டி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சவால்களைக் கொடுத்தாலும், உங்களைச் சாதிக்கவைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் வாயு புத்திரனை வழிபடுங்கள். நவகிரக சந்நிதியில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். மாற்றுத் திறனாளி களுக்கு உதவுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.