புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு கன்னி ராசி பலன்கள்

கன்னி
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னி

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு கன்னி ராசிபலன்கள்!

மனதில் பட்டத்தை வெளிப்படையாகப் பேசும் அன்பர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 5-ல் நிற்கும்போது 2023 புத்தாண்டு பிறக்கிறது. எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வருமா, வராதா என்றிருந்த பணம் கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்.

2023 புத்தாண்டு 
கன்னி ராசி பலன்கள்

பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறி வீர்கள். மகள் உங்களைப் புரிந்துகொள்வாள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக் கும். விலையுயர்ந்த ஆபரணம் சேரும். மனைவி வழியில் பிரச்னைகள் நீங்கும். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், அத்தியாவ சியச் செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக் கும். குடும்பப் பிரச்னைகளை வெளியே பகிர வேண்டாம்.

22.4.23 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கிக் கடன் கிடைத்து புது வீட்டை கட்டி முடித்து கிரகப்பிரவேசத்தை முடிப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். மூத்த சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். புது வேலை கிடைக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

2023 புத்தாண்டு 
கன்னி ராசி பலன்கள்

23.4.23 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்து போகும். வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பப் பிரச்னைகளைப் பெரிதுப் படுத்த வேண்டாம். அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். அயல்நாட்டுப் பயணம் தாமதமாகி முடியும். வழக்கில் நிதானம் அவசியம். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்குப் பல முறை படித்துப் பார்த்து கையெழுத்திடுங்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் சனி 5-ல் தொடர்வ தால், பிள்ளைகளுடன் மனத் தாங்கல் உண்டாகும். அவர்கள், பணியின் பொருட்டு உங்களைப் பிரிவார் கள். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 6-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம், வி.ஐ.பிகளின் நட்பு, வாகன அமைப்பு போன்ற சுபப் பலன்கள் உண்டாகும்.

8.10.23 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும் 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந் தெரியாத கவலைகள் வந்து செல்லும். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர்ப் பயணங்கள் உண்டு. வழக் கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

வியாபாரிகளே! ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்யுங்கள். தள்ளிப்போன புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கண்ணாடி, துணி, ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் வகைகளால் லாபம் அடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உங்களுக்கு எதிரான அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றல் ஆவார். இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு வளர்ச்சியையும் செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத் துடன் சென்று வழிபட்டு வாருங்கள். ஆலய அன்ன தானத்துக்கு இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்; தடைகள் நீங்கும்; தொட்டதெல்லாம் துலங்கும்!