புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு மகர ராசி பலன்கள்

மகரம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகரம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு மகர ராசிபலன்கள்

அயராது உழைக்கும் உழைப்பாளி நீங்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது 2023 புத்தாண்டு பிறக்கிறது. அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். உங்களின் தோற்றப்பொலிவு கூடும்.

2023 புத்தாண்டு 
மகர ராசி பலன்கள்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவ சியச் செலவுகளைக் குறைப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க வங்கியில் கடன் உதவி கிடைக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல வேலை அமையும். அடகில் இருக்கும் நகையை மீட்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும். வழக்கு சாதகமாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். தாய்வழிச் சொத்துக் களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.

வருட ஆரம்பம் முதல் 22.4.23 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலர், வெளிநாடு செல்வீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். லேசான தலைச் சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனைப் போராடி பைசல் செய்வீர்கள்.

2023 புத்தாண்டு 
மகர ராசி பலன்கள்

குரு பகவான் 23.4.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். எனவே மனஉளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம் வரக்கூடும். எடுத்த வேலையை முழுமை யாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வாகனத்தில் செல்லும்போதும், சாலையைக் கடக்கும் போதும் கவனம் தேவை. வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.

8.10.23 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத் தில் இடமாற்றங்கள், சம்பளப் பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ல் கேது தொடர்வதால் பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் நீங்கும்.

ஆண்டு தொடக்கத்தில் ஜன்மச் சனி தொடர்வ தால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டை கள் வந்துபோகும்; பெரிதாக்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பெரிய பதவியில் இருப்ப வர்களைப் பகைக்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் விமர்சனத்தைத் தவிர்க்கவும். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 2-ம் வீடான கும்ப ராசியில் சென்று பாதச் சனியாக அமர்வதால், இக்காலக்கட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை அவசியம்.

வியாபாரிகளே! இந்தாண்டு பற்று வரவு கணிச மாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூட மாகப் பேசுவார்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமா வார்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் ஆண்டு தொடக்கத்தில் வேலைச்சுமை வாட்டும். மையப்பகுதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அதிரடி முன்னேற்றங்களைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: செந்தில் வேலவனை சஷ்டி தினத்தில் தரிசித்து வழிபடுங்கள். ஆலய திருப்பணிகள் மற்றும் உழவாரப் பணிகளுக்கு இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்; வாழ்க்கை சுபிட்சமாகும்!