புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு மீனம் ராசி பலன்கள்

மீனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு மீனம் ராசிபலன்கள்

உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள். உங்களுக்கு லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் 2023 புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும்.

2023 புத்தாண்டு 
மீனம் ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது புத்தாண்டு பிறப்பதால் பண வரவுக்குக் குறைவிருக்காது. தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் இனி தடையின்றி நடந்தேறும்.

22.4.23 வரை ஜன்ம குரு நீடிப்பதால் வேலை அதிகரிக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். நல்ல வாய்ப்புகளைச் சரியாகப் பயன் படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று சில நேரங்களில் புலம்புவீர்கள். எதன் பொருட்டும் எவருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். அரசாங்க அதிகாரிகளைப் பகைக்க வேண்டாம். திடீர் பயணங்களும், செலவுகளும் இருக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாமே.

2023 புத்தாண்டு 
மீனம் ராசி பலன்கள்

ராசிநாதனான குருபகவான் 23.4.23 முதல் 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, களைப்பு நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஈகோ பிரச்னையால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப்போன கல்யாணம், சீமந்தம் நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைத்து புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். செலவுகள் இனி குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். அதிகச் சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். அடகிலிருந்த நகையை மீட்டுப் புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

8.10.23 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடன் பிரச்னை மனசை வாட்டும். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் சிறு பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம்.

வருடத் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பண வரவு உண்டாகும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதிய சொத்து வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். வட்டிக் கடன் அடைபடும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 12-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் வீண் செலவுகள், கடன் பிரச்னை வந்து செல்லும்.

வியாபாரிகளே! மே மாதம் முதல் லாபம் அதிகரிக் கும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். பங்குதாரர்களைப் பகைக்க வேண்டாம். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பவர் புராஜெக்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! மே மாதம் முதல் உங்களின் திறமைக்கு மரியாதை உண்டாகும். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு மன நிம்மதியையும் வசதி - வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் சமர்ப் பித்து வழிபடுங்கள். இயன்றால் ஒருமுறை திருப்பதி திருவேங்கடவனை தரிசித்து வாருங்கள்; குழப்பங்கள் நீங்கி வாழ்வில் திருப்பம் உண்டாகும்.