புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு மேஷ ராசிபலன்கள்

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
மேஷம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த புத்தாண்டு மேஷ ராசிபலன்கள்

மற்றவர்களின் உணர்வை மதிக்கும் பண்பாளர் நீங்கள். உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் வேளையில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் உடனே முடியும். கல்யாண விஷயங்கள் கூடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை கட்டுவீர்கள்.

2023 புத்தாண்டு 
மேஷ ராசிபலன்கள்

புது வீடு கட்டவும் சரியான நேரம் இது. சுயநல வாதிகளை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். எனினும், உங்கள் ராசியிலேயே புத்தாண்டு பிறப்பதால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருந்தாலும், அதற்கேற்ற வருமானமும் உண்டு. அவ்வப்போது உடல்நிலையும் கவனித்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் ஆழ்மனதில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டாம்.

22.4.23 வரை குரு ராசிக்கு 12-ல் இருப்பதால் சின்னச் சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு, வெளிநாட்டுப் பயணம் சாதக மாகும். 23.4.23 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமரப் போகிறார். எனவே, உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

உணவில் உப்பு, காரத்தைக் குறைத்துக் கொள் ளுங்கள். அவசரகதி உணவுகளை அறவே தவிர்க் கவும். வாக்கிங், உடற்பயிற்சி, யோகா செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் பிரச்னைகளைப் பெரிது படுத்த வேண்டாம். மனதுக்குச் சரி என்று படும் விஷயத்தை மட்டும் செய்யுங்கள். பிள்ளைகளிடம் உங்களின் கோபத்தைக் கொட்ட வேண்டாம். உணர்ச்சிவசப் படாமல் முடிவு எடுப்பது நல்லது.

2023 புத்தாண்டு 
மேஷ ராசிபலன்கள்

இனிய பேச்சுகளை நம்பி எவரிடமும் ஏமாந்துவிட வேண்டாம். குடும்பத்தில் சுபச் செலவுகள் தொடரும். உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலை சுற்றல் வரக்கூடும். விலையுயர்ந்த ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

வருடத் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால், உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வீர்கள்; புகழ், கௌரவம் வளரும். சொத்துப் பிரச்னைகளில் தீர்ப்பு சாதகமாகும். வெளி நாட்டில் உள்ள உறவுகளால் திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். நட்பு வட்டம் விரியும்.

29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 11-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது.

8.10.23 வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்துசெல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்; பெரிதுபடுத்த வேண்டாம். வாழ்க்கைத் துணைவருக்கு சிறியளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் எல்லா பிரச்னைகளும் ஓயும். ஷேர் மூலம் பணம் வரும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத் தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். கடையை விரிவு படுத்துவீர்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்தும் அளவிற்கு வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். பதவி- சம்பள உயர்வு வந்துசேரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகளை அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: சதுர்த்தி தினங்களில் பிள்ளையாருக் குப் பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள். அருகிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டுக்கு அபிஷேக திரவியங்கள் வாங்கிக் கொடுங்கள்; சங்கடங்கள் நீங்கும், நன்மைகள் கைகூடும்.