புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு ரிஷப ராசி பலன்கள்!

புத்தாண்டு ரிஷபராசி பலன்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டு ரிஷபராசி பலன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு ரிஷபராசி பலன்கள்

நீதிக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்டவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9-ம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் 2023 புத்தாண்டு பிறக்கிறது. இதுவரை உங்களிடமிருந்த வெறுப்பு, விரக்தி எல்லாம் விலகும்.

2023 புத்தாண்டு ரிஷப ராசி பலன்கள்!

வருமானம் உயரும். விலகியிருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள். குழந்தை இல்லாத வர்களுக்கு வாரிசு உருவாகும். நெடுநாள் வட்டிக் கடன் பைசலாகும். தடைப்பட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சிக்கு பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க உங்களின் பிள்ளைகளுக்கு ஏற்றமான காலம்தான். உங்கள் பேச்சுக்கு முக்கியத் துவம் கொடுப்பார்கள். வி.ஐ.பி-களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், செல்வாக்கு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தங்க நகை, ரத்தினங்கள் புதிதாக வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க முயற்சி செய்வீர்கள்.

எனினும், ராசிக்கு 12-ல் புத்தாண்டு பிறப்பதால், தவிர்க்க முடியாத செலவுகளும் பயணங்களும் வந்துகொண்டேயிருக்கும். 22.4.23 வரை குரு லாப வீட்டில் வலுவாகக் காணப்படுவதால் திடீர் பணவரவு உண்டு. நீண்டநாளாக எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மூத்த சகோதரர் உதவ முன் வருவார். பெரிய பதவிகள் தேடி வரும். வெளி வட்டாரத்தில் மதிப்பு - மரியாதை கூடும். பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும்.

2023 புத்தாண்டு ரிஷப ராசி பலன்கள்!

23.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலைப்பளுவும் கூடும் என்றாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். இயன்றவரையிலும் பட்ஜெட் போட்டு குடும்பச் செலவுகளைக் கையாளுங்கள். முன்பின் அறியாத வர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். வீடு, மனை விற்பதும் வாங்குவதும் லாபகரமாக முடிவடையும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர் வீட்டு விசேஷங்களில் முதன்மை இடம் வகிப்பீர்கள்.

இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் தொடர்வதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அக்கம்பக்கத்தில் சச்சரவுகள் நீங்கும். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 10-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், உத்தியோகத்தில் பணிச் சுமை, மறை முக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும்.

8.10.23 வரையிலும் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால், உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். 12-ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர் களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை, கேது 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிகள் வெகுதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தொடங்கும். ராகு 11-ல் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. சாதிக்கும் எண்ணம் பிறக்கும்.

வியாபாரத்தில் அமோகமாக லாபம் இருக்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். ஏப்ரல் மாதத்திற்குள் பழைய பாக்கிகள் வசூலாகும். புது கிளைகள் தொடங்கு வீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுக நிலை ஏற்படும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை ஆலோசித்து முடிவெடுக்கவும். உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புது வேலை அமையும். உயரதிகாரிகள் உங்களின் கோரிக்கையை ஏற்பர்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, முற்பகுதியில் அதிரடி வளர்ச்சி யையும்; நிறைவில் கொஞ்சம் அலைச்சலையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பெளர்ணமி தினங்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, அபிராமி அந்தாதி படித்து, அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுங்கள். அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று அம்பாளை வழிபடுங்கள்; தடைகள் நீங்கும்.