புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு சிம்ம ராசி பலன்கள்!

சிம்மம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்மம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு கடகராசி பலன்கள்

கலாசாரத்தில் பிடிப்புள்ளவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் 2023 புத்தாண்டு பிறப்ப தால் பணவரவு சரளமாக உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடக் கடினமாக உழைப்பீர்கள். ஆரோக்கியம் கூடும்.

 2023 புத்தாண்டு 
சிம்ம ராசி பலன்கள்!

வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் புதன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்; மகனின் அலட்சியப் போக்கு மாறும். சுக்கிரன் 6-ல் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது, கவனம் தேவை.

22.4.23 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால், செலவுகள் துரத்தும்; எதிர்பாராத பணவரவும் உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவர். சொந்த-பந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

23.4.23 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீட்டில் பிரச்னைகள் விலகி சந்தோஷம் நிலைக்கும்; சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். குழந்தைப் பாக்கியம் உண்டாகும். வருங்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

 2023 புத்தாண்டு 
சிம்ம ராசி பலன்கள்!

உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள், பணத்தைத் திருப்பித் தருவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணி முழுமையடையும். அரசு சம்பந்தப்பட்ட வேலை கள் விரைந்து முடியும். சிலருக்கு அதிகச் சம்பளம், சலுகையோடு நல்ல வேலை கிடைக்கும். ஏளனப் படுத்தியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டு வார்கள். நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். தாய்வழியில் மனக் கசப்புகள் நீங்கும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் சனிபகவான் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் வல்லமை பிறக்கும். வி.ஐ.பி-கள் ஆதரிப்பர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்து உயரும். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 7-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், சிறிது தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்து போகும்.

8.10.23 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். 9-ல் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை, கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வெளி வட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்க்கவும்.

வியாபாரிகளே! தேங்கிக்கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே மாதம் வியாபாரத்தை விரிவுப்படுத்தப் புதிய தொடர்பு கள் கிடைக்கும். ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில் திடீர் திருப்பங்களும், அதிரடி லாபமும் உண்டாகும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலெக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களே! பதவி- சம்பள உயர்வு தொடர்பாக நீங்கள் தொடுத்த வழக்கில் ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தீர்ப்பு வரும். வேறு நல்ல வேலையும் தேடி வரும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக ரகசியங்களை வெளியே பகிரவேண்டாம். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புகழையும் பண வரவையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமைகளில் துர்கை தரிசனமும் வழிபாடும் நன்மை அளிக்கும். இயன்றால் ஒருமுறை பட்டீஸ்வரம் துர்கையை வழிபட்டு வாருங்கள்; பிரச்னைகள் விலகும்!