புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு விருச்சிக ராசிபலன்கள்

விருச்சிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
விருச்சிகம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு விருச்சிக ராசிபலன்கள்

சகிப்புத்தன்மை மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும் போது, 2023 புத்தாண்டு பிறக்கிறது. சகல வாய்ப்பு களையும் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். அரசியலில் செல்வாக்கு கூடும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும்.

2023 புத்தாண்டு 
விருச்சிக ராசிபலன்கள்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்லும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. ஆக, எதையும் சமாளித்து வெற்றி பெறும் நெஞ்சுறுதி பிறக்கும். செலவுகள் இருந்தாலும் வருமானமும் உண்டு. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைப் பாக்கியம் உண்டாகும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்து வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் பணி முழுமை அடையும்.

2023 புத்தாண்டு 
விருச்சிக ராசிபலன்கள்

குரு பகவான் 23.4.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் வீண் டென்ஷன், விரயம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வேலைப்பளு உண்டு. கணவன்-மனைவிக்குள் சந்தேகம், விவாதங்கள் வந்து போகும். பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். சொத்து வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். எவருக்காக வும் ஜாமீன் வழங்கவேண்டாம். அரசுக் காரியங் களில் தாமதம் ஏற்படலாம்.

8.10.23 வரையிலும் உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால், குலதெய்வப் பிரார்த்தனையை திருப்தியாக நிறைவேற்றி வருவீர்கள். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். 9.10.23 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காகக் கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பிரச்னை எழலாம்.

புத்தாண்டுத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3-வது வீட்டிலேயே சனி பகவான் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வழக்கால் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். 29.3.23 முதல் 23.8.23 வரை சனிபகவான் அதிசாரத்தில் 4-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு கள் வரக்கூடும். தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்படும்.

வியாபாரிகளுக்கு இந்தப் புத்தாண்டில் ஏற்ற - இறக்கங்கள் இருக்கும். புதியவர்களை நம்பி புதிய முதலீடுகள் செய்யவேண்டாம். கட்டட உதிரிப் பாகங்கள், பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர் களுடன் பிரச்னைகள் வரக்கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் நிலையற்றச் சூழல் உருவாகும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வந்து சேரும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைச் சுற்றியுள்ள சிலரின் சுயநலப் போக்கை உணர வைப்பதுடன், சாமர்த்தியமாகச் செயல்பட வேண்டி யதன் அவசியத்தை உணரவைப்பதாக அமையும்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் தட்சிணா மூர்த்தியை வழிபடுங்கள். பெளர்ணமி தினங் களில் ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றிவைத்து அம்பாளை தரிசிப்பதால், இன்னல்கள் யாவும் நீங்கும்.