

உள்ளன்று வைத்து புறமொன்று பேசாதவர் நீங்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 15-ஆம் தேதி முதல் 3-ல் அமர்வதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். வி.ஐ.பி-கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வங்கிக் கடன் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குருவும், சுக்ரனும் தன ஸ்தானத் தில் அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கௌரவம் உயரும்.
##~## |
அரசியல்வாதிகள் சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவார்கள். கன்னிப் பெண்களின் புதுத் திட்டங் களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். ஊழியர்கள் சிலருக்காக உங்களின் மேலதிகாரியிடம் பரிந்துப் பேசுவீர்கள். கலைத் துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.
காரியங்கள் வெற்றியாகும்!
