

தன்மானமும் தளராத மனமும் கொண்டவர் நீங்கள். ராசிநாதன் சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப் பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாத படி செலவுகளும் இருக்கும். ஜன்ம குரு நீடிப்பதால் உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
15-ஆம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர் வதால் பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ல் அமர்வதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
##~## |
அரசியல்வாதிகள், தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்வது நல்லது. கன்னிப் பெண்களுக்கு, முடிவுகள் எடுப்பதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். பெற்றோர் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத் துறையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அமைதி, நலம் சேர்க்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism