Published:Updated:

மிதுனம்

மிதுனம்

மிதுனம்

மிதுனம்

Published:Updated:
மிதுனம்
மிதுனம்

தொலை நோக்குச் சிந்தனையால் வெற்றி பெறுபவர் நீங்கள். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். சுக்ரன் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
15-ஆம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அலைச்சல், காரியத் தாமதம், சைனஸ் தொந்தரவு, தொண்டை வலி வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 22-ஆம் தேதி வரை செவ்வாய் 3-ல் நிற்பதால் வழக்கு சுமூகமாகும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். 23-ஆம் தேதி முதல் 4-ல் நிற்கும் சனியுடன் செவ்வாய் இணைவதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, அவருக்கு வேலைச்சுமை, டென்ஷன் வந்துப் போகும். குருவும், கேதுவும் 12-ல் மறைந்திருப்பதால் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும்.

அரசியல்வாதிகள் எவரையும் விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியை தொடர வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வர். சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத் துறையினருக்கு, சம்பள பாக்கி வந்து சேரும்.

மனஉறுதி வெற்றி தரும்!

மிதுனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism