Published:Updated:

கடகம்

கடகம்

கடகம்

கடகம்

Published:Updated:
கடகம்
கடகம்

பிறர் தயவில் வாழ விரும்பாதவர் நீங்கள். லாப வீட்டில் குரு, சுக்ரன், கேது வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனதுக்கு இதமான செய்திகள் இல்லம் தேடி வரும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 22-ஆம் தேதி வரை செவ்வாய் 2-ல் நிற்பதால் வீண் செலவு, டென்ஷன் வந்துப் போகும். 23-ஆம் தேதி முதல் 3-ல் நுழைவதால் பேச்சில் இருந்த கடுகடுப்பு குறையும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும்.

##~##
அரசியல்வாதிகள், வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்க வேண்டாம்! கன்னிப் பெண்களுக்கு தோற்றப் பொலிவு கூடும். உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் சூடுபிடிக்கும். கடையை நவீனமயமாக்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தென்றல் வீசும் நேரம் இது!

கடகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism