Published:Updated:

சிம்மம்

சிம்மம்

சிம்மம்

சிம்மம்

Published:Updated:
சிம்மம்
சிம்மம்

னக்குத்தானே நீதிபதியாக இருப்பவர் நீங்கள். 15-ஆம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் அமர்வதால் உங்களது நிர்வாகத் திறன் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், சிறுக சிறுக சேர்த்த பணத்தில் ஒரு வீட்டு மனையாவது வாங்க முயற்சிப்பீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் அந்தஸ்து உயரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதச் சனி தொடர்வதால் முன்னெச்சரிக்கையாக இருங்கள். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். குருவும், கேதுவும் 10-ல் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். 22-ஆம் தேதி வரை செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். 23-ஆம் தேதி முதல் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால் புது தெம்பு பிறக்கும். 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும்.

##~##
அரசியல்வாதிகளுக்கு எதிர் கட்சியினரால் சில உதவிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புது யுக்தி களால் தேங்கிக் கிடந்த சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களின் வழி காட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

அதிரடி மாற்றங்கள் நிகழும்!

சிம்மம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism