Published:Updated:

கன்னி

கன்னி

கன்னி

கன்னி

Published:Updated:
கன்னி
கன்னி

வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைப்பவர் நீங்கள். குருபகவான் வலுவாக 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடிவரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
சுக்ரன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது வேலை கிடைக்கும். 15-ஆம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 10-ஆம் வீட்டில் நுழைவதால் புதிய பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 22-ஆம் தேதி வரை செவ்வாய் 12-ல் மறைந் திருப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். 23-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் அமர்வதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். 14-ஆம் தேதி மதியம் 1 மணி முதல்  16-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானித்துப் பேசுவது அவசியம்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேல்மட்டத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கூடி வரும். வணிகர்கள், சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங் களை கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களால் நன்மை உண்டு. கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

எண்ணங்கள் நிறைவேறும்!

கன்னி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism