Published:Updated:

துலாம்

துலாம்

துலாம்

துலாம்

Published:Updated:
துலாம்
துலாம்

டிப்பறிவுடன் அனுபவ அறிவும் கொண்டவர் நீங்கள். பாக்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பண வரவு உண்டு. வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். 2-ல் நிற்கும் ராகுவை குரு பார்ப்பதால் திடீர் திருப்பம் உண்டாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

22-ஆம் தேதி வரை செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிட்டும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ல் மறை வதால் மனைவியுடன் சிறுசிறு மோதல்கள் வந்துப் போகும். 8-ல் குரு, சுக்ரன், கேது நிற்பதால் பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

##~##
சூரியனின் போக்கு சரியில்லாத தால் தந்தைக்கு மருத்துவச் செலவு கள், அவருடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். சனி 12-ல் மறைந்தி ருப்பதால் யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம்;  வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள், சகாக்களைப் பற்றி குறை கூற வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு காதல் கைகூடும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீ காரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினர் நழுவிச் சென்ற ஒப்பந் தத்தை மீண்டும் பெறுவர்.

சாதிக்கும் நேரம் இது!

துலாம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism