Published:Updated:

தனுசு

தனுசு

தனுசு

தனுசு

Published:Updated:
தனுசு
தனுசு

மூக அவலங்களைத் தட்டிக் கேட்க தயங்காதவர் நீங்கள். கேது வலுவாக 6-ஆம் வீட்டில் தொடர் வதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
குருவும், சுக்ரனும் 6-ல் மறைந்திருப்பதால் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை, வீண் சந்தேகம் வந்துச் செல்லும். வாகனத்தில் செல்லும்போது அதிக வேகம் வேண்டாம். செவ்வாய் சாதகமாக இருப்பதால், பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 7-ல் நுழைவதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். 22, 23 ஆகிய தேதி களில் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானித்து செயல்படப் பாருங்கள்.

அரசியல்வாதிகள், கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலை யிடாமல் இருப்பது நல்லது. கன்னிப் பெண்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்துபோகும். உத்தியோகத்தில்  உயரதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத் துறையினரின் படைப்புகள் கடும் போராட்டத்துக்கு பிறகே வெளிவரும்.

முன்னேறும் தருணம் இது!  

தனுசு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism