Published:Updated:

மகரம்

மகரம்

மகரம்

மகரம்

Published:Updated:
மகரம்
மகரம்

திர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர் நீங்கள். 15-ஆம் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அதிக வட்டி கடனை பைசல் செய்வீர்கள். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கெரளவம் உயரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுக்ரன் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். 20-ஆம் தேதி வரை புதன் சொந்த வீட்டில் ஆட்சிப் பெற்றிருப்பதால் பணவரவு உண்டு. என்றாலும் செலவுகளும் துரத்தும். 21-ஆம் தேதி முதல் 7-ஆம் வீட்டில் நுழைவதால் உறவினர், நண்பர்களுடன் இருந்த பகைமை நீங்கும். 22-ஆம் தேதி வரை செவ்வாய் 8-ல் நிற்பதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், வீண் அலைச்சல், டென்ஷன், மனஇறுக்கம் வந்து செல்லும். 23-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். 24, 25 ஆகிய நாட்களில் சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

##~##
அரசியல்வாதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு புது வேலை கிடைக்கும். பால்ய காலத்து தோழிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்வதால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களது நிர்வாகத் திறமை வெளிப்படும். கலைத் துறையினர், பொது நிகழ்ச்சி களுக்கு தலைமை தாங்குவர்.

வெற்றிக் கனி தேடி வரும்!

மகரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism