

பண்பாட்டை விட்டுக்கொடுக்காமல் வாழ்பவர் நீங்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் உங்களது செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். 15-ஆம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் மன உளைச்சல், மனைவியுடன் வாக்குவாதம் வந்துச் செல்லும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
அரசியல்வாதிகள், உட்கட்சி பூசலை சந்திப்பார்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரது விருப்பங்களை நிறைவேற்றுவர். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம். பங்குதாரர்களின் தொந்தரவுகளை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். கலைத் துறையினர் மறைமுகப் போட்டிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும்.
திட்டமிட்டு செயல்படுங்கள்!
