Published:Updated:

மீனம்

மீனம்

மீனம்

மீனம்

Published:Updated:
மீனம்
மீனம்

டப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவர் நீங்கள்.  உங்கள் ராசிநாதன் குருபகவான் 3-ல் மறைந்தாலும் சாதகமான வீடுகளை பார்ப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் கூடும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்தால் ஆதாயம் அடை வீர்கள். புதிதாக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். 15-ஆம் தேதி முதல் சூரியன் 4-ல் அமர்வதால் வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாய்மாமன், அத்தை வகையில் எதிர்பார்த்த உதவிகளும் தேடி வரும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ல் நுழைவதால் உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறைக் காட்டுங்கள். கன்னிப் பெண்களின் தடைப்பட்ட திருமணம் கைகூடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள், சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

முக்கிய முடிவுகள் எடுப்பீர்!

மீனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism