Published:Updated:

மேஷம்

மேஷம்

மேஷம்

மேஷம்

Published:Updated:
மேஷம்
மேஷம்

ழுத்தமான கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள் நீங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். கல்யாண முயற்சி கள் பலிதமாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் பிறக்கும்.

##~##
குருபகவான் 2-ல் தொடர்வதால் வி.ஐ.பி-கள் மூலம் சில காரியங் களைச் சாதிப்பீர்கள். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். சூரியன் 3-ல் வலுவாக இருப்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தோற்றப் பொலிவு கூடும். செவ்வாய் 6-ல் அமர்ந்ததால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். 6-ம் வீட்டிலேயே சனியும் நீடிப்பதால் அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகு 8-ல் நிற்பதால் கொஞ்சம் அலைச்சல், மனஇறுக்கம் வந்து போகும். 30-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 2-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு உயர்கல்வி, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங் களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத் துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

ஈகை குணம் நலம் தரும்!

மேஷம்