Published:Updated:

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம்

Published:Updated:
ரிஷபம்
ரிஷபம்

பிரச்னைகளைக் கண்டு அஞ்சாதவர்கள் நீங்கள். உங்களின் தன-பூர்வ புண்யாதிபதி புதன் சாதக மான நட்சத்திரங்களில் செல்வதால் தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. ஆனால், 2-ல் நிற்கும் சூரியன் சேமிப்புகளை கரைப்பார்.

ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால் எதிர்நீச்சல் போட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை அழகுபடுத்துவீர்கள். 5-ல் நிற்கும் செவ்வாய், சனியால் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வ தாக நினைப்பீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். ஜென்ம குருவால் சோர்வு, அசதி வந்து போகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் யோசித்து செயல்படுங்கள். 2-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 4-ஆம் தேதிவரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

##~##
அரசியல்வாதிகளே... உட்கட்சி பூசல் வெடிக்கும். உஷார்! கன்னிப் பெண்கள், தடைப்பட்ட உயர் கல்வியை தொடர்வார்கள். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர் சித்தாலும் அனுசரித்துச் செல்லுங்கள். கலைத் துறையினர், தங்களது திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

எதிர்ப்பை முறியடிப்பீர்கள்!

ரிஷபம்