

பந்த, பாசத்துக்கு கட்டுப்பட்டவர் கள் நீங்கள். 4-ல் நிற்கும் செவ்வாய், சனியால் வேலைச்சுமை அதிகரிக்கும். டென்ஷன் வந்து போகும். பல வேலைகளை முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சூரியன் ராசிக்குள் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் வி.ஐ.பி-கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனை களை முடிப்பீர்கள். உங்கள் ராசி நாதன் புதன் 2-ல் நிற்பதால் கடனாக கேட்ட பணம் கிடைக்கும்.
##~## |
அரசியல்வாதிகள், தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. கன்னிப் பெண் கள் காதல் விவகாரத்தில் தள்ளி இருப்பது நலம். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வந்து போகும். கலைத் துறையினரின் கலைத் திறன் வளரும்.
முன்னேறும் நேரம் இது!
