

நேர்மையை நேசிப்பவர்கள் நீங்கள். குரு லாப வீட்டில் நிற்பதால் செல்வம், செல்வாக்கு கூடும். அடுத்தடுத்த விசேஷங்களால் வீடு களை கட்டும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். தங்க ஆபரணம் வாங்கு வீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். செவ்வாயும், சனியும் 3-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.
##~## |
அரசியலில், கட்சித் தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கன்னிப் பெண்கள், பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.
வெற்றிகள் தொடரும்!
