

பழைய அனுபவங்களைத் தவறாது பதிவு செய்து வைப்பவர்கள் நீங்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். சூரியன் 10-ல் நிற்பதால் தடைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றி பெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராசிக்குள் நிற்கும் சனியுடன் செவ்வாயும் நிற்பதால் கணுக்கால் மற்றும் கழுத்து வலி வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. 3-ல் ராகு தொடர்வதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. குரு ராசிக்கு 9-ஆம் வீட்டில் தொடர்வதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தோடு சென்று நிறைவேற்றுவீர்கள்.
##~## |
பேச்சால் வெற்றி தேடிவரும்!
