Published:Updated:

துலாம்

துலாம்

துலாம்

துலாம்

Published:Updated:
துலாம்
துலாம்

யர்வான எண்ணங்களுக்குச் சொந்தக்காரர்கள் நீங்கள். ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் ஓரளவு பணம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். புதன் 10-ல் நிற்பதால் கௌரவப் பதவிக்குத் தேர்தெடுக்கப்படுவீர்கள். 9-ல் சூரியன் நிற்பதால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு வீண் டென்ஷன், வேலைச்சுமை இருக்கும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்து போகும்.

8-ல் குரு நீடிப்பதால் பழைய நண்பர்களால் உதவி உண்டு! ஆனால், சேமிப்புகள் கரையும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். 12-ல் செவ்வாயும் சனியும் நிற்பதால் தூக்கமின்மை, மூட்டு வலி, ரத்த சோகை வரக்கூடும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். வழக்கை நிதானமாகக் கையாளுங்கள்.

##~##
அரசியல்வாதிகள் மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் எதிர்காலம் பற்றிய பயம், வீண் கவலைகள் வந்து போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்துகொண்டே இருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரிகள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினர், கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்வது நல்லது.

முயற்சியால் பலன் உண்டு!

துலாம்