Published:Updated:

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்

Published:Updated:
விருச்சிகம்
விருச்சிகம்

ன்னை நாடி வந்தவர்களை ஆதரிப்பவர்கள் நீங்கள். சுக்கிரன் 7-ல் தொடர்வதால் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனைவி யதார்த்தமாக ஏதேனும் அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சூரியன் 8-ல் நிற்பதால் செலவுகள் அதிகமாகும். திடீர்ப் பயணங்கள் உண்டு. புதன் வலுவாக நிற்பதால் பழைய நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செவ்வாய், சனி லாப வீட்டில் நிற்பதால் எதிர் பார்த்த பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சகோதரி க்குத் திருமணம் முடியும். ஆனால், ராசிநாதன் செவ்வாய் சனியுடன் நிற்பதால் நெஞ்சுவலி, வாயுக் கோளாறால் மூச்சுத் திணறல் வந்து போகும்.

##~##
அரசியல்வாதிகளுக்கு சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை கூடும். கலைத் துறையினருக்கு வெகுநாட்களாகத் தடைப்பட்ட வாய்ப்பு கூடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

எண்ணங்கள் புகழ் தரும்!

விருச்சிகம்