

மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்கள் நீங்கள். உங்கள் யோகாதிபதி செவ்வாய் 10-ல் நிற்பதால் சவாலான விஷயங்களைக் கூட சாதாரணமாக முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. ஆனால் சனியும் 10-ல் நிற்பதால் சின்ன சின்ன தடைகள் இருக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு ஆலோசிப்பது நல்லது. வீடு, மனை விற்பது, வாங்குவதில் எச்சரிக்கையாகச் செயல்படுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராசிநாதன் குரு 6-ல் நிற்பதால் ஒருவித அலுப்பு, சலிப்பு வந்து போகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். சுக்ரனும் ராசிக்கு 6-ல் தொடர்வதால் மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். சூரியன் 7-ல் நிற்பதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். கேது 6-ஆம் வீட்டில் நீடிப்பதால் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள்.
##~## |
முயன்றால் முன்னேறலாம்!
