Published:Updated:

மகரம்

மகரம்

மகரம்

மகரம்

Published:Updated:
மகரம்
மகரம்

ணம், காசு வந்தும் மாறாத குணம் கொண்டவர்கள் நீங்கள். குருவும் சுக்கிரனும் 5-ஆம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்ப தால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
6-ல் சூரியன் நிற்பதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், விலகிச் சென்ற பழைய சொந்தங்கள் எல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால் தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ராகு வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். 26-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.

அரசியல்வாதிகள் முக்கிய விழாக் களுக்குத் தலைமை தாங்குவீர்கள். கன்னிப் பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத் துறையினர் மூத்தக் கலைஞர்களிடம் சில நுணுக் கங்களை கற்றுத் தெளிவார்கள்.

புதிய பாதை தெரியும்!

மகரம்