Published:Updated:

கும்பம்

கும்பம்

கும்பம்

கும்பம்

Published:Updated:
கும்பம்
கும்பம்

கைச்சுவை உணர்வு அதிகம் பெற்றவர்கள் நீங்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளும், ஏமாற்றங்களும் இருந் தாலும் ஓயமாட்டீர்கள். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பூர்வீக சொத்தைப் போராடி பெறுவீர்கள்.

5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளை கள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசாங்க விஷயங்களில் அவசரம் வேண்டாம். 6-ல் புதன் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், தொண்டை புகைச்சல், கழுத்து வலி வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். 8-ல் சனியும், செவ்வாயும் நிற்பதால் முன்யோசனை இல்லாமல் அவசர முடிவுகள் எடுத்து, பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

##~##
எல்லோருக்கும் நல்லது செய்து கெட்ட பெயர்தான் மிஞ்சுகிறது என்று அவ்வப்போது அலுத்துக் கொள்வீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் 28-ஆம் தேதி மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வீண் கவலைகள் வந்து போகும்.

அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சிக்காரர்களை விமர்சித்து பேச வேண்டாம். கன்னிப் பெண்கள் காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் தாமதமாக முடியும்.

காத்திருந்து செயல்படவும்!

கும்பம்