

கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்குபவர்கள் நீங்கள். கேதுவும் சுக்கிரனும் வலுவாக 3-ஆம் வீட்டிலேயே நீடிப்பதால் தன் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சூரியன் 4-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 7-ல் சனியும், செவ்வாயும் நிற்பதால் மறதி, ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங் கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். 28-ஆம் தேதி மதியம் 1.30 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருங்கள்.
##~## |
திடீர் நன்மை உண்டு!
