முழு வேகத்தில் முன்னேற்றம்!

மேஷம்: எதையும் வித்தியாசமாக யோசிப்பவர்களே! குரு, சுக்கிரன் 2-ல் தொடர்வதால், உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். 6-ல் நிற்கும் சனியுடன் செவ்வாயும் நிற்பதால்... எதிலும் சலிப்பு, சோர்வு வந்து போகும். வியாபாரத்தில் புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

உதவிக் கரங்கள்... உங்களுக்காக!

ரிஷபம்: நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் ஆதாயம் உண்டு. தோழியிடம் எதிர்பார்த்த பண உதவி கிட்டும். ராசிக்குள் கேதுவும், குருவும் நிற்பதால்... நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். 4-ம் தேதி எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்யோகத் தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.

வசதி, வாய்ப்புகள் பெருகும்!

மிதுனம்: இலவசங்களை மறுப்பவர்களே! சூரியன் ராசிக்குள்ளேயே தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். என்றாலும், சுக்கிரனின் உதவியால் குடும்பத்தில் அமைதி திரும்பும். வசதி, வாய்ப்புகள் பெருகும். 4-ல் செவ்வாய், சனி நிற்பதால், உடல் உபாதை வந்து போகும். குருபகவான் 12-ல் மறைந்திருப்பதால்... செலவுகள் அதிகரிக்கும். 5, 6 ஆகிய தேதிகளில் பயணங்களின்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

ஆசைகள் கைகூடும்... அந்தஸ்து உயரும்!

கடகம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்பவர்களே! குரு வலுவடைந்திருப்பதால், குடும்ப வருமானம் உயரும். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பிள்ளை களால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சகோதரர் மனம் விட்டு பேசுவார். 7-ம் தேதி முதல் 9-ம் தேதி காலை 10.30 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோ கத்தில், உங்களின் திறமையால் மற்றவர்க¬ளை வியக்க வைப்பீர்கள். எதிர்பார்த்தபடி இடமாற்றம் கிடைக்கும்.

சூரியனால் சாதகம்!

சிம்மம்: தயாள குணம் உள்ளவர்களே! அனுபவ அறிவை பயன்படுத்தி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 15-ம் தேதி வரை ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 9-ம் தேதி காலை 10.30 மணி முதல் 11-ம் தேதி வரை அலைச்சல் இருக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

வீண் பழியிலிருந்து விடுதலை!

கன்னி: சிரிக்கப் பேசி சிந்திக்க வைப்பவர்களே! ராசிக்குள் நிற்கும் செவ்வாயும், சனியும் உங்களை சிரமப்படுத்தினாலும்... குருவும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். 12-ம் தேதி முதல் 14-ம் தேதி காலை 8 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. கணவருக்கு உறவினர்கள் பற்றிய சில விஷயங்களை புரிய வைப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர் கள் அதிகரிப்பார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. சிலருக்கு புது வேலை அமையும் வாய்ப்பு உண்டு.

அவசியம் தேவை... ஆரோக்கியத்தில் அக்கறை!

துலாம்: கொள்கைகளை மாற்றாதவர் களே! உங்கள் ராசியை பாவ கிரகங்கள் சூழ்ந்து நிற்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடம்பைக் குறைப்பதற்காக, முக வசீகரத்துக்காக என்று அநாவசிய மருந்து, கிரீம் எடுத்துக் கொள்ள வேண்டாம். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. 14-ம் தேதி காலை 8 மணி முதல் 16-ம் தேதி இரவு 7.30 மணி வரை வேலைச்சுமை கூடும். வியாபாரத்தில் அவசரப்பட்டு புது முத லீடுகள் வேண்டாம். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

கை நிறைய காசு... ரசனைக்கேற்ற வீடு!

விருச்சிகம்: முற்போக்கு சிந்தனைவாதிகளே! ராகு உங்கள் ராசியை முற்றுகையிட்டிருப்பதால் முன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது. குருவும், சுக்கிரனும் உங்களைப் பார்ப்பதால் ராஜதந்திரத் துடன் நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் தரு வீர்கள்.

இலக்கை வசமாக்கும் எதிர்நீச்சல்!

தனுசு: சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்களுக்கு உதவ வேண்டிய குரு 6-ல் தூங்கிக் கொண்டிருப்பதால், எந்த வேலையையும் முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் 10-ல் நிற்பதால், எதிர்நீச்சல் போட்டு இலக்கை பிடிப்பீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம் சுமார்தான். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் அதிகாரி களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

சுக்கிரன் உதவியால் பணவரவு!

மகரம்: புதுமை விரும்பிகளே! சுக்கிரன் உங்களுக்கு முழு பலத்துடன் உதவுவதால், பணம் வரும். சிலர் வீடு, ஊர் மாற வேண்டி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் சாதகமாக இருப்பதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். தோழி வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்து வீர்கள். வேலையாட்களால் வியாபாரத் தின் தரம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள்.

பொறுமை காக்க வேண்டிய பொழுது!

கும்பம்: குலப்பெருமை காப்பவர்களே! செவ்வாயும், சனியும் 8-ல் நிற்பதால், படபடப்பு அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் சச்சரவு, உடல் உபாதை வந்து நீங்கும். யோகாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால், நல்ல வர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உற வினர்கள் உதவுவார்கள். பூர்விக சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். கணவர் அவ்வப்போது டென்ஷ னாவார். பொறுமையுடன் இருங்கள். வியா பாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் ஈகோ பிரச்னை வரலாம்.

ஃப்ளாஷ்பேக் நேரம்!

மீனம்: எதிலும் ஆழமாக யோசிப்ப வர்களே! செவ்வாயும், சனியும் சேர்ந்து உங்களைப் பார்ப்பதால், வித்தியாசமாக யோசிப்பீர்கள். குரு சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வராது என்றிருந்த பணம் வரும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வந்து மனமகிழ்ச்சி தரும். மாமனார், மாமியார் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும்.