பிரீமியம் ஸ்டோரி
மேஷம்
மேஷம்

யற்கையை அதிகம் நேசிப்பவர் நீங்கள். ராசிநாதன் செவ்வாய் சனியுடன் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். எந்த வேலையைத் தொட்டாலும் இழுபறியாகவே இருக்கிறதே என்று டென்ஷன் ஆவீர்கள். உங்கள் வேகத்தை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சகோதரர்களால் செலவுகள் இருக்கும். 6-ல் நிற்கும் சனி யானை பலத்தைத் தருவதுபோல் தெரியும். ஆனால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். முக்கிய விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். சுக்கிரன் உங்களை எதார்த்தமாகப் பேச வைப்பார். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குரு உங்களின் குடும்ப

##~##
வருமானத்தை உயர்த்த உறுதுணை யாக இருப்பார். புதன் வக்கிரமாவதால் பழைய கடனை நினைத்து அவ்வப் போது பயப்படுவீர்கள். 16-ஆம் தேதி முதல் சூரியன் 4-ல் அமர்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கை, திருமண விஷயங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும்.

அரசியல்வாதிகள், வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்கள் திறமையான வகையில் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

வளைந்து நிமிர்வீர்கள்!

மேஷம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு