பிரீமியம் ஸ்டோரி
ரிஷபம்
ரிஷபம்

பாரம்பரியத்தையும், கலா சாரத்தையும் விட்டுக் கொடுக்காதவர் நீங்கள். ராசிக்குள் நிற்கும் குரு சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கொஞ்சம் காட்டும். யாருமே உங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று புலம்புவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

16-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் அமர்வதால், அதுமுதல் ஆரோக்கியம் கூடும். மனஇறுக்கம் நீங்கும். அரசு விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும். சுக்கிரன் ராசிக்குள்ளேயே நிற்பதால் புது தெம்பு பிறக்கும். ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருக்கும். 5-ல் செவ்வாயும், சனியும் தொடர்வதால் அடிவயிற்றில் வலி, தொண்டைப் புகைச்சல் வரும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் சிலர் மீது நம்பிக்கையின்மை, தர்ம சங்கடமான சூழ்நிலை உண்டாகும்.

##~##
அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவார்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத் தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சில நேரத்தில் கடிந்து பேசினாலும், பல வேளைகளில் கனிவாக நடந்து கொள்வர். கலைத் துறையினர் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவார்கள்.

நிதானம் அவசியம் தேவை!

ரிஷபம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு