பிரீமியம் ஸ்டோரி
மிதுனம்
மிதுனம்

தீட்டும் திட்டங்கள்  நிறைவேற கடினமாக உழைப்பவர் நீங்கள். யார் மனமும் புண்படும்படி பேசக் கூடாது என்ற முடிவுடன் நீங்கள் இருந்தாலும், சிலர் உங்கள் வாயை கிண்டிக் கிளறி வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். ராசிநாதன் புதன் வக்கிரமாக இருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் சொந்த வீட்டிலேயே நீடிப்பதால் நிதி நிலையைச் சமாளிப்பீர்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வீட்டை அழகாக்குவீர்கள். 16-ஆம் தேதி முதல், ராசியை விட்டு சூரியன் விலகுவதால் வயிற்று வலி, தலை வலி, முன்கோபம் நீங்கும். ஆனால் கண், பல் வலி வந்து போகும். ராகு வலுவாக 6-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பழைய பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

##~##
அரசியல்வாதிகள் சகாக்களைப் பற்றி குறைகூற வேண்டாம். கன்னிப் பெண்களின் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் நல்ல அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத் துறையினரை உதாசீனப்படுத்திய நிறுவனமே அவர்களை அழைத்துப் பேசும்.

ஆதாயம் தேடி வரும்!

மிதுனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு