பிரீமியம் ஸ்டோரி
கடகம்
கடகம்

குழந்தையின் அழுகையில்கூட சங்கீதத்தைப் பார்க்கும் கலைஞர்கள் நீங்கள். முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் எதிர்மறை கிரகங்களான செவ்வாயும் சனியும் நிற்பதால், மாறுபட்ட கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

குருவும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். 16-ஆம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் சோர்வு, களைப்பு, கண் எரிச்சல் வந்து போகும். கேது வலுவாக இருப்பதால், சுற்றியிருப்பவர்களின் பலம்- பலவீனம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

##~##
அரசியல்வாதிகள், தொகுதி பிரச்னைகளில் கவனம் செலுத்துவது நல்லது. கன்னிப் பெண்களுக்கு காதல் கைகூடும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் ரசனைக் கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

செல்வாக்கு கூடும்!

கடகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு