பிரீமியம் ஸ்டோரி
சிம்மம்
சிம்மம்

விட்டுக் கொடுத்துப் போவதை அதிகம் விரும்புபவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் குருவின் சாரத்தில் சென்றுகொண்டிருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் சில விஷயங்களை முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

சுக்கிரன் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால் சொந்த வீடு வாங்கும் யோகத்தைத் தருவார். வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை கிடைக்கும். குரு 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையும், வீண் பழியும் வந்து போகும். செவ்வாயும், சனியும் 2-ல் நிற்பதால், சிலர் உங்கள் வாயைக் கிளறுவார்கள். கண்டு கொள்ளாதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

##~##
அரசியல்வாதிகள் கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். கன்னிப் பெண்கள், பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தி யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத் துறையினருக்கு வருமானம் உயர வழி பிறக்கும்.

வேலைச்சுமை அதிகரிக்கும்!

சிம்மம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு