பிரீமியம் ஸ்டோரி
கன்னி
கன்னி

றப்போம்- மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், செவ்வாயும் சனியும் ராசிக்குள் நிற்பதால், எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பீர்கள். எந்த வேலையும் உடனே முடியவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.

சூரியனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். புது டிசைனில் நகை வாங்கு வீர்கள். புதன் வக்கிரமாக இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

##~##
ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வெகு நாட்களாக போக நினைத்த அண்டை மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 12 முதல் 14-ஆம் தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்க் கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கை ஏற்கப்படும்.  கலைத் துறையினரின் படைப்புக்கு நல்ல வரவேற்பு  கிடைக்கும்.

தொட்டது துலங்கும்!

கன்னி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு