பிரீமியம் ஸ்டோரி
துலாம்
துலாம்

ம்பி வந்தவர்களை கைவிடாத வர் நீங்கள். உங்கள் யோகாதிபதி சனி 12-ல் செவ்வாயுடன் சேர்ந்து நிற்பதால் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். சண்டை, சச்சரவுகளில் மூக்கை நுழைக்க வேண்டாம். கடுமையாக பட்டினி கிடந்து எந்த விரதத்தையும் இந்தக் காலகட்டத்தில் அனுஷ்டிக்க வேண்டாம்.

சுக்கிரன் 8-ல் நிற்பதால் அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். வாகனம் அவ்வப்போது பழுதாகி சரியாகும். மின் சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் ஓரளவு நிம்மதி கிட்டும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து கலந்தா லோசிப்பீர்கள். 16-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால் புது வேலை கிடைக்கும். 14-ஆம் தேதி காலை 8 மணி முதல் 16-ஆம் தேதி இரவு 7.30 மணி வரை சந்தி ராஷ்டமம் நடப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள்.

##~##
அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப் பார்கள். கன்னிப் பெண்கள் காதல் விவகாரத்தில் தள்ளி இருப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடை வெளிவிட்டுப் பழகுவது நல்லது. கலைத் துறையினர் இழந்த புகழை மீண்டும் பெற முயற்சிப்பார்கள்.

அனுபவ அறிவு உதவும்!

துலாம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு