பிரீமியம் ஸ்டோரி
விருச்சிகம்
விருச்சிகம்

விரும்பியதை அடையும்வரை இடைவிடாது உழைப்பவர் நீங்கள். ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் வீடு, மனை விற்பது, வாங்குவது சாதகமாக முடியும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

குருவும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் 8-ல் நிற்பதால், முக்கியமான வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

##~##
16-ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 18-ஆம் தேதிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் வீண் கவலைகள் வந்து போகும்.

அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். உஷார்! கன்னிப் பெண்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் செய்வோர், தொழிலில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவார்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத் துறையினருக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

இழுபறி நிலை மாறும்!

விருச்சிகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு