பிரீமியம் ஸ்டோரி
தனுசு
தனுசு

மயோஜிதமாக பேசி எல்லோரை யும் வசீகரிப்பவர்கள் நீங்கள். உங்கள் பூர்வபுண்யாதிபதியான செவ்வாய் 10-ல் வலுவாக நிற்பதால் சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை கிட்டும். பூர்வீகச் சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள். சிலர் கட்டடம் கட்டத் தொடங்குவீர்கள்.

சனியும் 10-ஆம் வீட்டில் தொடர்வ தால் மனஉளைச்சல், ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து போகும். சுக்கிரன் 6-ல் நிற்பதால் திடீர் முடிவுகள் எடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். வாகனத்தைத் தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்த  வேண்டாம். உங்களுக்கு உதவ வேண்டிய குரு 6-ல் மறைந்து நிற்பதால் வேலைச்சுமையும், திடீர் செலவுகளும் தொடரும்.

##~##
சூரியனின் போக்கு சாதகமாக இல்லாததால் மனைவிக்கு மருத்துவச் செலவு, வீண் டென்ஷன் வந்து போகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 19 முதல் 21-ஆம் தேதி மதியம் ஒரு மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அரசியல்வாதிகள்,வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்கள், பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக் கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். கலைத் துறையினரின் படைப்புக்கு வேறொருவர் உரிமை கொண்டாட நேரலாம். உஷார்!

பொறுப்புகள் அதிகரிக்கும்!

தனுசு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு