பிரீமியம் ஸ்டோரி
மகரம்
மகரம்

சுயமாகச் சிந்திக்கும் நீங்கள், எதிலும் புதுமையை விரும்புபவர்கள். உங்கள் யோகாதிபதி புதன் 11-ஆம் தேதி முதல் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெற்று அமர்வதால் பணம் வரும். ஆனால், செலவுகளும் துரத்தும். வி.ஐ.பி-களின் நட்பால் இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள்.

குரு வலுவாக 5-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். செவ்வாய் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.

##~##
15-ஆம் தேதி வரை சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். 16-ஆம் தேதி முதல் 7-ல் நுழைவதால்  முன் கோபம் தலை காட்டும். 21-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் 23-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள், தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்குக் கொண்டு செல்வது நல்லது. கன்னிப் பெண்கள், தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். வியா பாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.  

வெற்றிபெறும் வேளை இது!

மகரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு