பிரீமியம் ஸ்டோரி
கும்பம்
கும்பம்

ற்றார்- உறவினருடன் மனம் விட்டுப் பேசி பழகுபவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சனி எதிர்மறை கிரகமான செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால், உங்களைப் பற்றி நீங்களே குறைத்து மதிப்பிடுவீர்கள். முன்கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். உங்கள் குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள்.

யோக கிரகம் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைய வாய்ப்பு இருக்கிறது. உறவினர்கள், நண்பர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள்.

##~##
15-ஆம் தேதி வரை சூரியன் 5-ல் நிற்பதால் அலைச்சல், குழப்பம் வந்து நீங்கும். 16-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வழக்கு வெற்றி அடையும். 23-ஆம் தேதி மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் அவசியம்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் கால நேரம் இல்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத் துறையினருக்கு தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.  

சாதிக்கும் நேரம் இது!

கும்பம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு