பிரீமியம் ஸ்டோரி
மீனம்
மீனம்

லக்கை எட்டிப் பிடிக்க இறுதி வரை போராடுபவர் நீங்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் அடுக்கடுக்காகப் பிரச்னைகள் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக முடிவெடுக்கக் கற்றுக் கொள்வீர்கள்.

சூரியன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். சுக்கிரன் 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்கு வீர்கள். கல்யாணம் கூடி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.

##~##
குரு கேதுவுடன் நிற்பதால் மூச்சுப் பிடிப்பு, மூச்சுத் திணறல், வேலைச்சுமை வந்து போகும். சனியும், செவ்வாயும் 7-ல் அமர்ந்தி ருப்பதால் மனைவியைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அரசியல்வாதிகள் எந்த கோஷ்டி யிலும் சேராமல் நடுநிலையாக இருப்பது நல்லது. கன்னிப் பெண்களின் கல்வித் தகுதிக்கேற்ப புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் தொழில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். பெரிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத் துறை யினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய முயற்சி வெற்றி தரும்!

மீனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு